வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் சென்ற வேலன் சுவாமிகள் எங்கே?



நேற்றையதினம் (08-03-2024) வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த ஏழு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மஹாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு நல்லூர் சிவகுரு ஆதீன கர்த்தா தவத்திரு வேலன் சுவாமிகளும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு சென்றிருந்தார்.



ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாடு
இந்நிலையில் வேலன்சுவாமிகளின் தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும், அவர் குறித்துப் பதற்றமடையவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலன் சுவாமிகள் அதிகாலை 1.00மணிவரை பொலிஸ் நிலையத்தில் நின்றுவிட்டு பின்னர், வெடுக்குநாரிமலை ஆதிசிவனாலய நிர்வாக உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளபோதும் இலங்கை பொலிஸார் , மஹாசிவராத்திரிக்கு வழிபாடுகளை மேற்கொள்ள சென்றவர்கள் மீது காட்டுமிராட்டித்தனமாக கைதுகளை மேற்கொண்டிருந்தமை  தமிழர் மனங்கள வேதனை கொள்ளச் செய்துள்ளது.
புதியது பழையவை