வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸார் நேற்றையதினம் அத்துமீறி நடந்துகொண்டதுடன் ஆலயத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
ஆலயத்திலிருந்த பூஜை பொருட்கள் மற்றும் படையல் பொருட்களை அப்புறப்படுத்தியுள்ளதுடன் சப்பாத்துக்கால்களால் சேதப்படுத்தியுள்ளனர்.
பொலிஸாரின் இந்த செயற்பாடு பலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
இது மட்டுமன்றி நேற்று இரவு வெடுக்குநாறிமலையில் பலர் தாக்கப்பட்டதோடு 8 பேர் கைதுசெய்யப்படமையும் குறிப்பிடத்தக்கது.