சுவாமி விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் விழா நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.


மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் விழாவினை சிறப்பிக்குமுகமாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ ஏற்பாட்டில் ஶ்ரீமத் சுவாமி அக் ஷ ராத் மானந்தன் மஹராஜ் தலைமையில் முப்பெரும் விழா இடம்பெற்று வருகின்றது.


அதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட
புளியந்தீவு வாவிக்கரை வீதி பகுதியில் அமையப் பெற்றுள்ள ராமகிருஷ்ண மிஷனின் பூர்வீக நிலத்தில் இளைய சமூகத்தினரின் கல்வி மேம்பாட்டுக்காக சுவாமி விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.


ஶ்ரீமத் சுவாமி அக் ஷ ராத் மானந்தன் மஹராஜ்
தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தியா வேலூர் மாவட்ட உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடங்களின் துணைச் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி மகராஜ் முதன்மை அதிதியாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ,பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன், மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் , பிரதேச செயலாளர் வீ .வாசுதேவன் ஆகியோர் அழைப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு நகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அரசியல் பிரமுகர்கள் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்கள உயர் அதிகாரிகள் ,ஊர்ப் பிரமுகர்கள், ஆணைப்பந்தி ஆலய நிர்வாக உறுப்பினர்கள்,விபுலானந்தர் நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகள் இந்தியா வேலூர் மாவட்ட உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடங்களின் துணைச் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி மகராஜ் சுவாமிகளினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.புதியது பழையவை