இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இலங்கை தமிழச்சி!இலங்கையை பூர்வமாக கொண்ட பிரித்தானிய கிரிக்கெட் வீராங்கனையான அமுருதா சுரேன்குமார், இங்கிலாந்து கிரிக்கெட் அணி - U19 பெண்கள் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

17 வயதான (2006.10.24) அமுருதா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் பிரசித்தி பெற்ற சன்ரைசர்ஸ் அகாடமியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

அமுவுக்கு கிரிக்கெட் மீதான காதல் சிறு வயதிலிருந்தே ஊட்டப்பட்டது.  இவரது தந்தை சிவா சுரேன்குமார், யாழ்ப்பாணத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரிக்காக விளையாடி, ஒரு பெரிய போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஏப்ரல் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள U19 பெண்கள் கிரிக்கெட் முக்கோணத் தொடரில் அமுருதா அவர்கள் விளையாட உள்ளார். 

எம் நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண் தன் திறமை மூலம் உலக அரங்கில் பிரசித்தி பெறுவது மகிழ்ச்சியான விடயம். வாழ்த்துக்கள்!


புதியது பழையவை