இலங்கை ஜனாதிபதிக்கும் புதிய தாய்லாந்து தூதுவருக்கும் இடையில் விஷேட சந்திப்பு!ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான புதிதாக நியமனம் பெற்றிருக்கும் தாய்லாந்தின் தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது, கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் (11-03-2024) இடம்பெற்றுள்ளது. 


இதன் போது, இலங்கைக்கான புதிய தாய்லாந்து தூதுவரும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்துள்ளனர். மேலும், இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை