எரிபொருளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இன்று (04-03-2024)நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விலை திருத்தம் 
இதனடிப்படையில்,  92 ரக பெட்ரோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.


சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெயின் விலை லீட்டருக்கு  5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை