சாந்தன் சுமார் 30 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் தனது தாயாரை நேரில் காண்பது ஒரு நிறைவேறாத நிகழ்வாக மாறியுள்ளமை தமிழர் தாயகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனைப் பெற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தனது பிள்ளையை உயிருடன் பார்த்துவிட வேண்டும் என 30 வருட காலத்திற்கு மேலாக சாந்தனின் தாயார் காத்திருந்து அதற்காக பல முறைகள் பிரார்த்தனைகளும் செய்துள்ளார்.
தாயின் கதறல்
ஆனால், இறுதியில் சாந்தன் இலங்கைக்கு திரும்பவிருந்த நாளில் அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற சாந்தனின் இறுதி அஞ்சலியின் போது அவரின் ஏக்கமும் கதறலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.