கனடாவில் புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள இந்து கோயில்
கனடாவின் புதிய இந்துக் கோயில் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவிலுள்ள பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளில் முதல் தடவையாக இந்து கோயில் ஒன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோயிலை தீவுகளில் வாழ்ந்து வரும் இந்து சமூகத்தினர் கூட்டாக இணைந்து நிர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்திய குடியேறிகள்
பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளில் அதிக எண்ணிக்கையிலான இந்திய குடியேறிகள் வாழ்ந்து வருகின்ற நிலையில் இதுவரையில் இந்து கோயில் ஒன்று நிர்மானிக்கப்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்து ஆலயங்கள் இல்லாத காரணத்தினால் பல இந்துக்கள் தீவினை விட்டு விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதியது பழையவை