நாட்டில் சில இடங்களுகளில் மழை பெய்யும்!
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட காலநிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுமென திணைக்களம் அறிவித்துள்ளது.


முன்னெச்சரிக்கை

அத்தோடு, நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.


இந்நிலையில், காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புதியது பழையவை