பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான அரியவகை வலம்புரியை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொரந்துடுவ தெல்துவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதனடிப்படையில் காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி மற்றும் உப காவல்துறை பரிசோதகர் கசுன் பத்திரன உள்ளிட்ட காவல்துறை குழுவினர் பேருவளை பிரதேசத்தில் உள்ள பிரபல தேவாலயத்திற்கு அருகில் சந்தேக நபரை சோதனை செய்து வலம்புரியுடன் கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை