பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்து!



யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்றுவரும் இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.


இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் “நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் நேற்று (06-03-2024) ஆரம்பமாகியுள்ளது.


இதன்போது பரசூட்டில் பறந்து சாகசத்தில் ஈடுபட்ட விமானப்படை சாகச வீரர் விபத்திற்குள்ளான நிலையில், எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



குறித்த கண்காட்சி எதிர்வரும் (10-03-2024) ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை