இலங்கையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் அதிகரிக்கும் உயிரிழப்பு!




இலங்கையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.

வருடாந்தம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 1407 என கணக்கிடப்பட்டுள்ளதுடன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு சுமார் 780 பேர் என கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

நோய்கள் பரவுவதை அலட்சியப்படுத்தினால்
இங்குள்ள ஆபத்தான நிலைமை என்னவென்றால், இந்த நோய்கள் பரவுவதை அலட்சியப்படுத்தினால், இந்த நாட்டில் 2070 இல் 58,754 இறப்புகளும் 2120 க்குள் 115,137 இறப்புகளும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


களுத்துறை மாவட்டத்தை இலக்காகக் கொண்டு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் ஒழிப்பு கணக்கெடுப்புக்கான முதலாவது முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை