பொத்துவில் மாவட்ட நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் அக்கரைப்பற்றுக்கு இடமாற்றம்




இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் வருடாந்த இடமாற்றத்தின் கீழ் பொத்துவில் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொத்துவில் மாவட்ட நீதிமன்றில் கடந்த 2 வருடங்களாக கடமையாற்றிய நீதிபதி ரிஸ்வான் அங்கு பல ஆண்டுகளாக தவணையாக இழுபட்டு வந்த நூற்றுகணக்கான சிவில் வழக்குகளை துரிதமாக அதிரடி தீர்ப்புக்கள் வழங்கி மக்களுக்கு தீர்வை ரிஸ்வான் பெற்றுக் கொடுத்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை
பொத்துவில் பகுதியில் சட்டவிரோத போதை பாவனை.மற்றும் விற்பனை போன்ற வழக்குகளில் இறுக்கமான தீர்ப்புகளை வழங்கி பொத்துவில் பகுதியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

தற்போது அக்கரைப்பற்று பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை போன்ற வழக்குகளில் இறுக்கமான தீர்ப்புகளை வழங்கி வருகின்றார்.


அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் நீண்ட காலங்களாக இழுபட்டு வந்த குடும்ப தகராறுகள் .பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சிறிய விடயங்கள் அடங்கிய வழக்குகள் தற்போது உடனுக்குடன் திறந்த மன்றில் நீதிபதி ரிஸ்வான் தீர்வு கொடுத்துள்ளார்.

அதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றார்கள். அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றின் வரலாற்றிலே மாலை 5 மணி கடந்தும் சிவில் வழக்குகள் நடைபெற்று வருகின்றது.

சிவில் வழக்குகள்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் நீண்ட காலங்களாக தவணை தவணையாக இழுபட்டு வரும் ஆயிரக் கணக்கான சிவில் வழக்குகள் இந்த ஆண்டுக்குள் துரிதமாக தீர்ப்பு வழக்கப்படும் என்று அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

7 ஆண்டுகள் கடந்தும் சுமார் 700 காணி வழக்குகள் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் தவணைகளாக இழுபட்டு வருகின்றதாம். அதனால் மக்கள் நேரத்தையும் காலத்தையும் கடத்தி பணத்தையும் வீணாக செலவு செய்து ஒரு தீர்வு காணப்படாமல் வழக்காளிகள் மற்றும் எதிராளிகள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றார்கள்.

இதேவேளை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் நீண்ட காலங்களாக தவணைகளாக இழுபட்டு வருகின்ற சிவில் வழக்குகளுக்கு நீதிபதி ரிஸ்வான் மூலமாக விரைவில் தீர்வு காணப்படும் என்று மக்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பலமாகவே இருந்து வருகின்றது.

வாரத்தில் திங்கள் மற்றும் புதன்கிழமை மட்டுமே சிவில் வழக்குகள் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வருவதனால் மக்களின் வழக்குகளை கையாள்வதற்கு நாட்கள் போதாமல் உள்ளது அதனால்தான் இந்த 2 தினங்களிலும் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரையும் வழக்குகளை நீதிபதி ரிஸ்வான் நடத்தி வருகின்றார்.

இந்த செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த செயற்பாடுகள் மூலமாக 3 வருடங்களுக்கு மேலாக இழுபட்டு வரும் காணி வழக்குகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நீதிபதி ரிஸ்வான் தீர்ப்பு வழங்குவார் என்று அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் செயற்படும் சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை