எரிபொருள் விற்பனை ஆரம்பம்




இலங்கை எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் வருகை தந்துள்ளது.

குறித்த கப்பலானது, நேற்று (21-03-2024) கொழும்பு துறைமுகத்தில் தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


எரிபொருள் விற்பனை 
அதன்படி, இன்று(22-03-2023) முதல் 150 நிரப்பு நிலையங்கள் மூலம் இந்நிறுவனம் எரிபொருள் விற்பனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


1880ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வந்த ஷெல் எரிபொருள் நிறுவனம் 1961ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்டது.

63 வருடங்களின் பின்னர்
அதன் பின்னர் இந்த நிறுவனம் ஆசியாவில் தமது செயற்பாடுகளை இலங்கையிலிருந்து அகற்றி சிங்கப்பூரில் ஆரம்பித்து இன்று சிங்கப்பூரில் மாபெரும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.


இந்நிலையில், 63 வருடங்களின் பின்னர், ஷெல் நிறுவனம் இலங்கையின் எரிசக்தி துறையில் மீண்டும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை