யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் டிப்பரும் எரிபொருள் பவுசரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து இன்று (22-03-2024) அதிகாலை ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
வீதிப் போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்த நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் தடம்புரண்ட எரிபொருள் பவுசரில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் சிந்திக் காணப்படுகின்றது.