புலம் பெயர் வாழ் ஈழத்து மாணவி தரண்யா ஸ்ரீகரன் கலைத்துறையில் உலகலாவிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
இலண்டன் தமிழ் நிலையத்தில் பாலர் வகுப்பு முதல் தமிழையும் பரதநாட்டியத்தையும் கற்ற தரண்யா ஸ்ரீகரன் ICCR ( Indian Council for Cultural Relations) உலகலாவிய ரீதியில் நடாத்திய பரதநாட்டியப் போட்டியில் இரண்டாவது இடத்தினைப் பெற்றுப் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அதுமட்டுமல்லாது தரண்யா ஸ்ரீகரன், கற்பித்த ஆசிரியர் கலாக்ஷேத்திர மாணவி ஸ்ரீமதி திரிவேணி சங்கரகுமாருக்கும் தமிழ்ச்சமூகத்திற்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளார்.
தரண்யா ஸ்ரீகரன் தனது நடனத்தை முறைப்படி Harrow வில் உள்ள Natyakshetra நடனப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீமதி திரிவேணி சங்கரகுமாரிடம் கற்றவர் ஆவார்.
இந்நிலையில் , அண்மையில் அரங்கேற்றம் கண்ட (23/09/2023) தரண்யா ஸ்ரீகரன் உலகலாவிய ரீதியில் சாதனை படைத்திருப்பதும் புலம்பெயர் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அதேவேளை University of Cambridge நடத்தும் தமிழ் உயர்தரப் பரீட்சையில் A தரத்தில் சித்தி பெற்றதுடன் தொடர்ந்து பாடசாலையில் பரதநாட்டிய உதவி ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.
அத்துடன் தரண்யா ஸ்ரீகரன் University of London (UCL) இல் Biomedical Engineering துறையில் கல்வி கற்கின்றார். இந்நிலையில் சாதனை படைத்த மாணவி தரண்யா ஸ்ரீகரனுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.