போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு கனடாவில் நினைவுச்சின்னம்




இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழ் நினைவுச் சின்னத்திற்கான வடிவமைப்புக்கு 3 ஆண்டு கால தாமதத்திற்குப் பின்னர் கனேடிய பிராம்டன் நகர சபை ஒப்புதல் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் தமிழ் இனப்படுகொலை நினைவகம் 2025ஆம் ஆண்டுக்குள் சிங்குகூசி பூங்காவில் கட்டப்படும் என நகரசபை தெரிவித்துள்ளது.

நினைவுச்சின்னம்
4.8 மீற்றர் உயரமுள்ள துருப்பிடிக்காத எஃகு நினைவுச்சின்னத்தின் இறுதி வடிவமைப்பாக உள்ளது.



இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று தாயகத்தின் சுருக்கத்தை கொண்டுள்ளது.

அதனைச் சுற்றியுள்ள தூண்களில் பல தசாப்தங்களாக நடந்த உள்நாட்டுப் போர் பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
கடந்த 2021 ஜனவரியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்துத் தள்ளப்பட்ட பின்னர் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் தமது நகரத்தில் ஒரு நினைவுச்சின்னத்தை அமைப்பதாக உறுதியளித்திருந்தார்.


இதனை தமிழ் சமூகத்தில் பலர் இனப்படுகொலை என்று அழைக்கின்றனர்.

இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிப்பதற்கு கனடாவின் நாடாளுமன்றமும் ஒருமனதாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை