மட்டக்களப்பு தேத்தாத்தீவு புனித யூதா ததேயு திருத்தல பங்குமக்கள் சாகும்வரை உண்ணா விரதம்



மட்டக்களப்பு மறைமாவட்ட ஆளுகைக்கு உட்பட்ட வகையில் 100 க்கு மேற்பட்ட குடும்பங்களை கொண்டு நூற்றாண்டினை தாண்டி செயற்பட்டுக்கொண்டிருக்கும் தேத்தாத்தீவு புனித யூதா ததேயு தேவாலயத்தில் அண்மைக்காலங்களாக முன்னெடுக்கப்படும் சில முரண்பாடான செயற்பாடுகளுக்கும் முறைகேடான நடவடிக்கைகளுக்கும் நீதி வேண்டி தேவாலய பங்குக்கு உட்பட்ட மக்கள் இன்று(03-03-2024) காலையிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.


தேத்தாத்தீவு புனித யூதா ததேயு தேவாலயத்திற்கு கடந்த ஜனவரி 5 ம் திகதி இரண்டு அருட்தந்தைகள் கடமைக்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவர்களில் ஒருவர் ஒரு சில நாட்களிலே மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மறை மாவட்ட ஆயர் கடந்த 12 வருடங்களாக குறித்த தங்கள் பங்கு மக்களை சந்திக்க வரவில்லை எனவும் இவ் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் மக்கள் தெரிவிக்கிகின்றனர்.

உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் மக்கள் தங்களது தேவாலயத்திற்கு நியமிக்கப்பட்டு மீளப்பெறப்பட்ட அருட்தந்தையை மீண்டும் நியமிக்க வேண்டும் எனவும் தேவாலய எதிர்காலம் குறித்து கலந்துரையாட மட்டக்களப்பு அருட்தந்தை உடன் தேவாலயத்திற்கு வருகைதர வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்ளப்பு மாவட்டத்தில் செயற்பாட்டிலிருக்கும் பங்குகளில் மிகப்பழமையான பங்குகளில் ஒன்றாக காணப்படுகின்ற தேற்றாத்தீவு புனித யூதா ததேயு தேவாலய பங்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறோம்.
புதியது பழையவை