ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்




ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


குறித்த நிலநடுக்கம் இன்று (21-03-2024) காலை ஏற்பட்டுள்ளது.

இது 5.3 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சுனாமி எச்சரிக்கை

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மத்திய டோக்கியோவிலும் உணரப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.


நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அத்துடன் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.

ரிங்க் ஆப் பயர் எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை