வெடுக்குநாறிமலை விவகாரம் - நீதி கோரி வவுனியாவில் போராட்டம்!வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் பொதுமக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான குறித்த போராட்டமானது தற்போது ஊர்வலமாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் போராட்டத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.புதியது பழையவை