காட்டு யானைத் தாக்கி வெளிநாட்டவர் உயிரிழப்பு!அம்பாறை பொத்துவில் மணச்சேனை, கோமாரிய பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டு யானையினால் மிதியுண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இத்தாலிய சுற்றுலாப் பயணியான 50 வயதான ஜிஞ்சினோ பாலோ, மற்றுமொரு இத்தாலிய சுற்றுலாப் பயணியுடன் கொமரியா பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதன்போது குறித்த சுற்றுலாப்பயணி காயமடைந்த நிலையில், 1990 அவசர நோயாளர் காவு வாகனம் மூலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போது அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை