இலங்கை கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடித்த தன்வந்த்திருகோணமலையைச் சேர்ந்த 13வயதுடைய தன்வந்த் என்னும் சிறுவன் தனக்கு பயிற்சியளித்த கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடித்து பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலொன்றிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், தனக்கு பயிற்றுவித்த கடற்படை அதிகாரியின் கனவாக இருந்தது அவரது சாதனையை முறியடிக்க வேண்டும் என்பது அது எனக்கு பாரிய உந்து சக்தியாக இருந்தது.

அவர் பயிற்றுவித்த நால்வருமே பாக்கு நீரினை வெற்றிகரமாக கடந்துள்ளனர். ஆனால் கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.இவர் போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்குநீரிணையை நீந்தி சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை