தமிழர்களின் வரலாற்று இடங்கள் தொல்பொருள் என்ற போர்வையில் சூறையாடப்பட்டுவருவதாக கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மட்டு.ஊடகய அமையத்தில் நேற்று(17-03-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.
ஒன்றியத்தின் வேண்டுகோள்
தமிழர்களின் பாரம்பரிய தலங்களை பாதுகாப்பதற்கு முன்வரவேண்டும் என்பதுடன் அதற்கு உறுதுணையாக கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஆதரவாக இருக்கும் எனவும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதன் குருக்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிவராத்திரி தினத்தன்று(08-03-2024) கைதுசெய்யப்பட்ட வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய குருக்கள் உட்பட அனைவரையும் விடுதலைசெய்ய ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும் என இந்துக்குருமார் ஒன்றியம் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளது.