ரமழான் மாதத்திற்கான பிறை தென்பட்டது -நாளை முதல் புனித நோன்பு பெருநாள் ஆரம்பம்
நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப்பிறை இன்று (11-03-2024)மாலை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை (12-03-2024)முதல் புனித நோன்பு பெருநாள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் பிறைக்குழுவின் உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
புதியது பழையவை