வடக்கு - கிழக்கில் இன்றுவரை நடத்தப்பட்ட அனைத்து மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பிலும் விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கையின் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கடந்த 2023 நவம்பரில் நடைபெற்ற நினைவேந்தல்களை தடுக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ புலனாய்வு அதிகாரி, தாக்கல் செய்த மனுவின் மீது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம முன்னிலையானார்.
நோன்பு காலத்தில் அம்பாறை - மருதமுனை மத்ரஸா பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை
மாவீரர் நாள் நினைவேந்தல்
கடந்த வாரம் நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது,
"பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) நடத்திய விசாரணைகள் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தனது துறை உத்தேசித்துள்ளது" என்று விக்கிரம கூறினார்.
கடந்த ஆண்டு, இலங்கையின் காவல்துறை மா அதிபர் (IGP) மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) இயக்குநரும், மாவீரர் நாளை நினைவுகூர முயற்சித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்தநிலையில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், குறித்த மனுவை பெறுவதற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு விக்ரம நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாள் அல்லது மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடாந்தம் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்று வருகின்றன.