வவுனியாவில் நெல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து!வவுனியா - புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (13-03-2024)மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.பொலிஸ் விசாரணை


முல்லைத்தீவிலிருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் புளியங்குளம் சந்திக்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.


வாகனத்தின் முன்சக்கரம் வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை