வெளிநாட்டு பெண் கட்டுநாயக்கவில் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சீனப் பெண்ணொருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம்  (12-03-2024)ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தனது மகளை இலங்கை பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டுத் தப்பி சென்ற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

35 வயதுடைய மூன்று வயது மற்றும் 6 மாத இரு மகள்களின் தாயான குறித்த சீன பெண் தனது 58 வயது தாயுடன் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.


இந்த நிலையில் குருணாகல் பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய இலங்கைப் பெண், சீனப் பெண்ணின் துபாய் வீட்டில் தொழில் புரிந்துள்ளதுடன் அவரது பிள்ளைகளையும் பராமரித்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இலங்கை பெண் தனது சேவையை முடித்துக் கொண்டு அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார். 

இந்நிலையில் குறித்த சீன பெண் தனது வீட்டில் பணியாற்றிய இலங்கைப் பெண்ணை தொடர்புகொண்டு, தான் இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும், தம்மை அழைத்துச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறும் கூறியுள்ளார்.


இதனை தொடர்ந்து இலங்கை பெண் சீன பெண்ணை பார்ப்பதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், அங்கு வந்த சிறிது நேரத்திலேயே சீன பெண், தனது இளைய மகளை இலங்கை பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு விமான நிலையத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சீன பெண்ணையும், அவரது தாயையும் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதியது பழையவை