நாட்டின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு (water cut )நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை National Water Supply and Drainage Board) தெரிவித்துள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு (water cut ) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நீர் விநியோகம் தடை
இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி, பியகம, மஹர, கந்தானை மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளிலே நீர் விநியோகம் தடை நடைமுறைப்படுத்தப்படும் என சபை அறிவித்துள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (National Water Supply and Drainage Board) குறிப்பிட்டுள்ளது.