ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் விடுதலை
மட்டக்களப்பு  சிறைச்சாலையிலிருந்து இன்று(13-04-2024) 16 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறிய குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும்  சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கேற்பில் கைதிகளை விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
புதியது பழையவை