தேர்தல்கள் தொடர்பில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்ஜனாதிபதி தேர்தல் (Presidential election) மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் (Parliament election) இரண்டையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நடைமுறைச் சிக்கல்களால் அது முடியாத காரியம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தனித்தனி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டும்.


அரசியல் கட்சிகள்
எனினும், ஜனாதிபதித் தேர்தலின் போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வாக்குச் சீட்டு அச்சிடப்பட வேண்டும்.


இந்த இரண்டு தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் வெவ்வேறு விதமாக கூட்டணி அமைக்கின்றன.

இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் அரசியல் கூட்டணி பொதுத் தேர்தலில் பிரிந்து விடும் வாய்ப்புள்ளது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை