மாமனிதர் டி.சிவராம் அவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!


படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராம் அவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (28-04-2024)மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு.ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்துள்ளது.

இன்று 4.00மணியளவில் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.

அதனை தொடர்ந்து தூபிக்கு முன்பாக இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்ப்டுள்ளது.
புதியது பழையவை