இருமல் மருந்து விற்பனைக்கு 6 நாடுகள் தடை




6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றின் இருமல் மருந்தானது தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

குறித்த இருமல் மருந்தை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துவந்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவர்களினால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை தொடர்ந்து அருந்தி வந்த குழந்தைகள் பலருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதனை செய்துள்ளது.


இதன்போது அந்த இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக குழந்தைகள் அதை குடிக்கும்போது உடலில் நச்சுத்தன்மை அதிகமாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, கென்யா,நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்ற அனைத்து மருந்துகளையும் மீள பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை