புத்தாண்டில் பெண் இந்தியதூதர் ஒருவர் அணிந்த ஆடை - கவனத்தை ஈர்த்த செயல்
புத்தாண்டு தினத்தில் கம்போடியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கம்போடியாவிற்கான இந்தியத்தூதர்  'கெமர் அப்சரா' உடையணிந்த படங்களைப் X தளத்தில் பகிர்ந்ததன் மூலம் அவை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

கம்போடியாவிற்கான இந்தியத்தூதர் தேவயானி கோப்ரகடே கம்போடியாவின் கெமர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அபிமானம் கொண்டவர்.


கெமர் புத்தாண்டின் உணர்வைத் தழுவி, அவர் ஒரு கெமர் அப்சராவாக நேர்த்தியாக உடையணிந்து, நமது நாகரிகங்களின் வளமான பிணைப்பை வெளிப்படுத்தினார்.

எங்கள் அனைத்து நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான கெமர் புத்தாண்டு கொண்டாட்ட தினத்தில் வாழ்த்துகிறோம் என X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை