மட்டக்களப்பு திருப்பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்தும் கலாசார விளையாட்டு விழா!





குரோதி" வருட சித்திரைப் புத்தாண்டை முன்னீட்டு மட்டக்களப்பு திருப்பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் பெருமையுடன் நடாத்தும்
கலாசார விளையாட்டு விழாவானது (27-04-2024)ஆம் திகதி பி.ப.03.00மணிக்கு 
மட்/பட் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மைதானத்தில் "சூட்டிங் ஸ்டார்"விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மு.குகதாசன் தலைமையில்  இடம் பெற்றன


விசேட அதிதியாக
திருமதி. ஜஸ்டீனா யுலேக்கா முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்


சிறப்பு அதிதியாக

திரு.சோ.ரங்கநாதன், பிரதேச செயலாளர்  போரதீவுப்பற்று

அழைப்பு அதிதிகள்

திரு.வே. ஈஸ்பரன் சிரேஷ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், கிழக்கு மாகாணம்

திரு.அபேரின்பநாயகம்
மேலதிக மாவட்ட பதிவாளர் பிரதேச செயலகம் மண்முனை தென் எருவில் பற்று

ஆ.பிரபாகரன்
கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலகம், போரதீவுப்பற்று

திரு.இ.மகேந்திரன்
திடீர் மரணவிசாரணை அதிகாரி. போரதீவுப்பற்று மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை வைத்தியர்கள் ஆகியோரை 
மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து
கொடியேந்தல் வைபவம்
ஒலிப்பிக் தீபம் ஏந்தல்
மங்கல விளக்கேந்தல்
இறைவணக்கம் இடம்பெற்றனர்


வரவேற்புரை 
தலைமையுரை அதிதிகள்யுரை இடம்பெற்றன

சித்திரை கலாசார விளையாட்டுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடம்பெற்றனர்.





அதிதிகள் பொன்னாடை போற்றி கௌரவித்தல் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த(சா.த) பரீட்சைகளில் அதியுயர் சித்தி பெந்றோர் மற்றும் க.மொ.த (உ.த) பரீட்சைகளில் சித்தி பல்கலைக்கழகம், தேசிய கல்விக் கல்லூர்க்கு தெர்வான திருப்பழுகாமத்து மாணவர்களை கௌரவித்தல் நிகழ்வுகள் இடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற வீரர் வீராங்கனை களுக்கான பரீசில்கள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகம்.










இன்றைய நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் கிராமஉத்தியோகஸ்தர்கள்  விளையாட்டுகழக உறுபினர்கள்  சிறுவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









புதியது பழையவை