மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்!
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்
மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது,


கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், அலிஸாஹீர் மௌலானா, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உட்பட
திணைக்கள தலைவர்கள் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள்
குறித்தும் ஆராயப்பட்டது.

மயிலத்தமடு, மாதவனை விவகாரம், வாகரை இல்மனைட் அகழ்வு தொடர்பான சர்ச்சைகள் உட்பட பல்வேறு விடயங்களும் இன்றைய தினம் ஆராயப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை