மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து - இருவருக்கு காயம்மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த காரும் மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிகுடி விஷ்ணு ஆலயத்திற்கு முன்னால் வைத்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இன்று(15-04-2024)விபத்து ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்துள்ளதுடன் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


புதியது பழையவை