ஓடுதளத்தில் மோதிக்கொண்ட விமானங்கள்
லண்டன் விமானநிலையம் ஒன்றில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் அங்கு பரபரப்பான சூழல் உருவானதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள ஹீத்ரு விமான நிலையத்திலேயே நேற்று (06-04-2024) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,


விமானத்தின் இறக்கை
"எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த விமான நிலையத்தின் 3-வது டெர்மினல் பகுதியில் வெர்ஜின் அட்லாண்டிக் போயிங் 787-9 ரக விமானம் பயணிகளை நேற்று இறக்கிவிட்டது.


அப்போது அதே ஓடுபாதையில் வந்திறங்கிய மற்றொரு விமானத்தின் இறக்கை பகுதி இந்த விமானத்துடன் லேசாக உரசியது.


இதன் காரணமாக இரண்டு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.


இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையம் நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை