இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு குறித்து வெளியான அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரி அறிவிப்பு வெளியிடும் அதிகாரம் இன்றிலிருந்து 100 நாட்களின் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதியின் பின்னர் எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான வேட்பு மனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலை எப்போது நடத்துவது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்ததன் பின்னர், தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க வேட்பு மனு கோரும் அறிவிப்பினை வெளியிடுவார்.தேர்தலுக்கான அடிப்படை பணிகள்
ஜனாதிபதி தேர்தல் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படக் கூடும் எனவும், பிரச்சாரத்திற்காக 28 முதல் 35 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை பணிகளை தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதியது பழையவை