கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) இரண்டு கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (20-04-2024) போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இரு பெண்களிடமும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதை மாத்திரைகளை உடலில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது, இரு பெண்களின் உடலில் இருந்தும் 21 மற்றும் 11 போதை மாத்திரைகள் பெறப்பட்டுள்ளன.
குறித்த மருந்து மாத்திரைகளின் எடை ஏறக்குறைய 500 கிராம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள் இருவரும் துருக்கி (Türkiye) எயார் விமானமானத்தின் (TK 730) மூலம் காலை 6 மணியளவில் இலங்கை வந்துள்ளனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.