போரதீவுப்பற்றில் காணாமல்போன மாணவன் பட்டிருப்பு ஆற்றில் சடலமாக மீட்பு!



மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்ற காணாமல்போன நிலையில் இன்று (20-04-2024)சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19-04-2024) மாலை பெரியபோரதீவிலிருந்து களுவாஞ்சிகுடிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனே இவ்வாறு காணாமல்போன நிலையில் இன்று பட்டிருப்பு பாலதிற்கு கீழான ஆற்றுப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



மீட்கப்பட்டவர் பெரியபோரதீவு,பட்டாபுரத்தினை சேர்ந்த லோகநாதன் கிதுசன் என்னும் 17வயது மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வீட்டிலிருந்து களுவாஞ்சிகுடிக்கு தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்றவர் நேற்று மாலை வரையில் வீடு திரும்பாத நிலையில் பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் அவர் சென்ற துவிச்சக்கர வண்டியும் அவர் அணிந்துசென்ற காலணியும் கிடப்பதை அறிந்த குடும்பத்தினர் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்று பகல் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் சடலத்தினை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.



புதியது பழையவை