திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர்திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் 5ம் கட்டை பகுதியில் வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (06-04-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் கடமையாற்றி வரும் சீனக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது.


காயங்களுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

புதியது பழையவை