நாட்டில் இடியுடன் கூடிய கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு, மேற்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுமெனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


சூரியன் உச்சம்

மேலும், ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் போது சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேல் இருக்குமென திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, இன்று (07-04-2024) நண்பகல் 12:12 மணிக்கு கடவத்தை, பதுளை, லுனுகல, கொங்கஸ்பிட்டிய, பக்மிட்டியாவ மற்றும் கொத்மலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
புதியது பழையவை