பொலன்னறுவை - வெலிகந்த, சிங்கபுர வீதியின் முத்துவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் நிபுன் நிர்மல் புஸ்பகுமார என்ற இருபது வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை
வெலிகந்த நகரிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இடது பக்கமாக வந்த எருமை மாட்டைக் காப்பாற்ற முற்பட்ட போது, மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வலப்புறமாகத் திரும்ப முற்பட்ட போது, மரத்தில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளின் 19 வயதுடைய சாரதி விபத்திற்குள்ளாகி காயமடைந்த நிலையில், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.