இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்




இந்தோனேசியாவின் ஜகார்த்தா அருகே சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது, ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது.


எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் கருட் ரீஜென்சிக்கு தென்மேற்கே 151 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தலைநகர் மற்றும் அருகிலுள்ள பான்டென் மாகாணம் மற்றும் மத்திய ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் ராட்சத அலைகளைத் தூண்டாது என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அமைப்பால் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை