காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!புத்தளம் - ஆனமடு பொலிஸ் பிரிவுக்கு உபட்ட ரம்பேயாய பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (21-04-2024) இடம்பெற்றுள்ளது.

புத்தளம் - ஆனமடு பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
புதியது பழையவை