இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.