திருகோணமலையில் புதையல் தோண்டிய பலர் கைது!திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 13 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நேற்றிரவு (11-04-2024) கைது செய்துள்ளனர்.

இதன்போது இரத்தினபுரி, கேகாலை மற்றும் தெவனிபியவர பகுதிகளில் வசித்து வரும் 21 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன் கைது செய்யப்பட்ட 13 பேரில் நான்கு பேர் மொரவெவ பொலிஸ் பிரிவில் வசித்து வருபவர்கள் எனவும் அவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாட்ஸ்அப் (Whatsapp) ஊடாக புதையல் தொடர்பில் புகைப்படங்களை பரிமாறிக்கொண்டமை ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புதியது பழையவை