மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் இடமாற்றம்மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள செயளாலர் கீதாஞ்சலி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பட்டிருப்பு கல்வி வலய பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய(களுவாஞ்சிகுடி) கல்வி சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த கல்வி பணிப்பாளர் திருகோணமலையில் உள்ள மாகாண கல்வி திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும், கூறியுள்ளார்.புதியது பழையவை