சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் (31-05-2024)ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்துகின்றது.

நாளை(31-05-2024)ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மதத்தலைவர்கள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள்,பொது அமைப்புகளை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை