புத்தளம் கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான திமிங்கலத்தின் எச்சங்களுடன் இரண்டு கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (29-05-2024) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலில் மிதந்த 23 கிலோ நிறையுடைய திமிங்கல எச்சங்களை இரகசியமான முறையில் எடுத்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கடற்றொழிலாளர்களிடமிருந்த திமிங்கல எச்சங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.